`ஜல்லிக்கட்டு!’ - அங்கமாலி டைரீஸ் பட இயக்குநரின் அடுத்த படைப்பு #Jallikattu | Lijo Jose Pellissery Announces His Next Film

வெளியிடப்பட்ட நேரம்: 18:57 (19/07/2018)

கடைசி தொடர்பு:18:57 (19/07/2018)

`ஜல்லிக்கட்டு!’ - அங்கமாலி டைரீஸ் பட இயக்குநரின் அடுத்த படைப்பு #Jallikattu

லிஜோ ஜோஸ் பெல்லிசேரி தனது அடுத்த படத்துக்கான அறிவிப்பை ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


ஜல்லிக்கட்டு

அங்கமாலி டைரீஸ், ஆமென், டபுள் பேரல் போன்ற படைப்புகள் மூலம் மலையாள சினிமாவில் தனித் தடத்தில் பயணித்துக்கொண்டிருப்பவர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. இளம்தலைறை இயக்குநர்களில் ரசிகர்களால் அதிகம் பேசப்படுபவர். தன் ஒவ்வொரு படைப்பிலும் தனி முத்திரை பதித்து வருகிறார். தற்போது தனது அடுத்த படத்துக்கான அறிவிப்பை ஃபேஸ்புக் மூலம் வெளியிட்டுள்ளார். தனது அடுத்த படைப்புக்கு ஜல்லிக்கட்டு என பெயரிட்டுள்ளார். இதற்கான போஸ்டரை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்துக்கான கதையை ஹரீஸ் மற்றும் ஆர்.ஜெயக்குமார் எழுதியுள்ளனர். கேமரா மேன் கிரிஷ் கங்காதரன் அங்கமாலி டைரீஸ் படத்துக்குப் பிறகு இந்தப் படத்தில் மீண்டும் இணைகிறார். பிரசாத் பிள்ளை இசை அமைக்கிறார். தாமஸ் பனிக்கர் இந்தப்படத்தை தயாரிக்கிறார்.