வெளியிடப்பட்ட நேரம்: 21:21 (20/07/2018)

கடைசி தொடர்பு:21:21 (20/07/2018)

புதிய டிசைனில் `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் டைட்டில்!

கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், தனுஷின் அண்ணனாக சசிகுமார் நடிக்கும் காட்சிகளும் அடங்கும். சென்னையில் நடந்த படப்பிடிப்பின்போது கெளதம் மேனன், தனுஷ், சசிகுமார் ஆகிய மூவரும் ஒன்றாக இருக்கும் போட்டோ இணையத்தில் வைரலானது.

எனை நோக்கி பாயும் தோட்டா

படத்தின் இரு பாடல்களுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தற்குப் பிறகு, படத்தைப் பற்றிய அப்டேட் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், படத்தின் டைட்டில் புது ஃபான்டுடன் விரைவில் வெளியாகும் என்ற அறிவிப்பு வந்தது. இப்போது, படத்தின் ஒரு சில போஸ்டர்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் இயக்குநர் கெளதம் மேனன்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க