`சர்வதேச நடிகர்' விருது போட்டியில் இடம்பெற்ற விஜய்!

சர்வதேச சாதனையாளர் விருது பட்டியலில் நடிகர் விஜய் பெயரும் இடம்பெற்றுள்ளது. 

நடிகர் விஜய்

சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் (IARA) என்ற அமைப்பு, சர்வதேச கலைஞர்களைக் கௌரவிக்கும் விதமாக விருதுகளை   2014-ம் ஆண்டு முதல் வழங்கிவருகிறது. நாடகம், சினிமா, இசை, டெலிவிஷன் ஆகிய துறைகளில் உலக அளவில் சாதனை புரிபவர்களைப் பாராட்டும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, வரும் செப்டம்பர் மாதம் லண்டனில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதற்கிடையே, இந்த ஆண்டுக்கான விருதுப் போட்டியில் நடிகர் விஜய் பெயரும் இடம்பெற்றுள்ளது. 

`மெர்சல்' படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகர் பிரிவில் விஜய் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவருடன் 'ஏஜென்ட்' திரைப்பட நடிகர் கும்புலாமி கே சிபியா, 'சைட் சிக் கேங்' நடிகர் அட்ஜெட்டே அனாங், 'எல் ஹெபா எல் அவ்டா' நடிகர் ஹசன்,  'சில்ட்ரன்ஸ் ஆஃப் லெஸ்ஸர் காட்' நடிகர் ஜோஷுவா ஜாக்சன் மற்றும் 'தி ராயல் ஹைபிஸ்கஸ் ஹோட்டல்' பட நடிகர் கென்னத் ஒக்கோலி ஆகியோர் பெயரும் இடம்பெற்றுள்ளது.

ரசிகர்கள் ஆன்லைன் மூலமாக அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில்  கலைஞர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை இதற்கான வாக்கெடுப்பு நடைபெறுகிறது. 'மெர்சல்' படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்பு வெளியாகி வெற்றிக்கொடி நாட்டிய நிலையில், இந்தச் செய்தி வெளியாகி தற்போது விஜய் ரசிகர்களை உற்சாகமடையவைத்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!