வெளியிடப்பட்ட நேரம்: 18:36 (21/07/2018)

கடைசி தொடர்பு:18:46 (21/07/2018)

ஹரீஷ் கல்யாண் - ரைஸாவின் `பியார் பிரேமா காதல்’ ட்ரெய்லர்..!

பியார் பிரேமா காதல்

'சிந்து சமவெளி', 'பொறியாளன்', 'வில் அம்பு' படங்களில் நடத்த ஹரீஷ் கல்யாண், 'பிக் பாஸ்' முதல் சீஸனில் கலந்துகொண்டு பிரபலமானார். அதே சீஸனில் கலந்துகொண்டு பலரின் கவனத்தை ஈர்த்த ரைஸாவுடன் சேர்ந்து ஹரீஷ் கல்யாண், `பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்துள்ளார். ரைஸா ஏற்கெனவே `லேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தாலும், ஹீரோயினாக இதுவே அவருக்கு முதல் படம்.

 

 

 

 

யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து இசையமைக்கும் இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கெனவே வெளியாகியிருக்கும் நிலையில், தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் இளன் இயக்கியிருக்கிறார்.