செப்டம்பர் 13-ம் தேதி சமந்தா vs சமந்தா! | September 13 its double release for Samantha

வெளியிடப்பட்ட நேரம்: 07:57 (23/07/2018)

கடைசி தொடர்பு:07:57 (23/07/2018)

செப்டம்பர் 13-ம் தேதி சமந்தா vs சமந்தா!

திருமணத்துக்குப் பிறகும் பல படங்களில் நடித்து வருகிறார் சமந்தா. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டும் இவர், தற்போது தயாராகி வரும் 'யூ-டர்ன்' படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.
   

யூ டர்ன் - சமந்தா


2016-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்றது  'யூ' டர்ன் படம். தமிழில் சமந்தா, ஆதி, ராகுல்ஆகியோர் நடிக்க கன்னட இயக்குநர் பவன்குமார் படத்தை இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தில் பூமிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.    

U turn    

திருமணத்துக்குப் பிறகும் பல படங்களில் நடித்து வருகிறார் சமந்தா. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடிக்க ஆர்வம் தெரிவிக்கிறார் சமந்தா. தற்போது நடித்து வரும் 'யூ-டர்ன்' கதாநாயகிக்கு முக்கியம் வாய்ந்த கதைதான். படத்தில் பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.   

இயக்குநர் பவன்குமாரின் முந்தைய கன்னடப் படமான 'லூசியா'வும் பெரும் வெற்றி பெற்றது. அப்படத்தைத்  தமிழில் 'எனக்குள் ஒருவன்' என்று ரீமேக் செய்து தோல்வியைத் தழுவியது. எனவே, தானே இப்படத்தை தமிழில் ரீமேக் செய்வது உகந்ததாக இருக்கும் எனத் தமிழில் அறிமுகமாகிறார் பவன்குமார். இந்நிலையில், இப்படம் செப்டம்பர் 13-ம் தேதி வெளியாகும் என ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதே தேதியில் சமந்தா சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படமும் வெளிவரவுள்ளது. செப் 13-ம் தேதி சமந்தா vs சமந்தா போட்டி என்பது  குறிப்பிடத்தக்கது.