வெளியிடப்பட்ட நேரம்: 08:51 (23/07/2018)

கடைசி தொடர்பு:10:31 (23/07/2018)

அந்த சம்பவத்தைக் கேட்டு மனசு உடைஞ்சிட்டேன் - த்ரிஷா

இயக்குநர் ஷங்கரிடம் இணைத் இயக்குநர் மற்றும் இணை தயாரிப்பாளராக இருந்தவர் ஆர்.மாதேஷ். 'மதுர', 'சாக்லேட்',அரசாங்கம்,’மிரட்டல்' படத்தை இயக்கிய இவர் 'மோகினி' திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். மோகினி படம் வரும் 27-ம் தேதி வெளிவரவுள்ளது. கதாநாயகி த்ரிஷாவோடு யோகி பாபு, சுகன்யா, கவுசல்யா, முகேஷ் திவாரி, சாமிநாதன், கணேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். இசை-விவேக் மெர்வின். இவர் ‘புகழ்’ படத்தின் இசையமைப்பாளர். ஒளிப்பதிவு -ஆர்.பி.குருதேவ், படத் தொகுப்பு தினேஷ் பொன்ராஜ் மேற்கொள்கிறார்.

த்ரிஷா

இப்படத்தைப் பற்றி பேசிய த்ரிஷா ``முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடிச்சிருக்கேன், வைஷ்ணவி, மோகினினு இரண்டு கதாபாத்திரத்தில் இரண்டுமே என் ஃபேவரைட்டு கதாபாத்திரங்களாக இருந்தாலும் சவாலானது 'மோகினி'தான்.  படத்தில் ஆக்‌ஷனுக்காக பல ஸ்டன்டுகளை டூப் இல்லாமல் நடிச்சிருக்கேன். 

'96', 'சதுரங்கவேட்டை 2' படங்களில் நான் நடிப்பது சாதாரண ஹீரோயின் ரோல்தான். அதெல்லாம் பெரிய ஹீரோ படங்களளும்கூட. கதை நல்லா இருக்கும் பட்சத்தில் கதாநாயகி பிரதானமாக இருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுப்பேன். கதை நல்லா இருந்தா இன்னொரு பேய் படம்கூட கண்டிப்பா பண்ணுவேன். ஹாரர் படங்கள் இன்னிக்கு ஒரு மினிமம் கியாரண்டி படமா இருந்து வருகிறது. எல்லோரும் அதை பார்க்க நினைக்கிறார்கள்" என்றார் த்ரிஷா

சென்ற வாரம் சென்னையில் நடந்த கொடூர பலாத்கார சம்பவத்தைப் பற்றி பேசும்போது ``இது நிச்சயமாக கண்டிக்கப் பட வேண்டியது. அந்த சம்பவத்தைக் கேட்டு மனசு உடைஞ்சிட்டேன். இந்த மாதிரி விஷயங்கள் நடக்கும்போது மனசுக்கு ரொம்ப வேதனையா உள்ளது. குறிப்பாக அதில் குழந்தைகள் பாதிக்கப்படும்போது ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது" என்றார்.