``த்ரிஷா பண்ண மேஜிக் என்னால பண்ணமுடியாது” - ஐஸ்வர்யா ராஜேஷ் ஓப்பன் டாக்!

2003-ம் ஆண்டில் விக்ரம் - இயக்குநர் ஹரி கூட்டணியில் வெளியானது 'சாமி' திரைப்படம். அப்படத்தில்  விக்ரம், த்ரிஷா, விவேக், ரமேஷ் கண்ணா எனப் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர். இத்திரைப்படம் மிகப் பெரிய ஹிட் ஆனது. இதைத் தொடர்ந்து  சாமி-2 படத்தை இயக்கப் போவதாக இயக்குநர் ஹரி சென்ற வருடம் அறிவித்திருந்தார். அதன்படி இதற்கான சூட்டிங் வேலைகளும் மிக வேகமாக தொடங்கி நடைபெற்று வந்தன. நேற்று (23-07-2018) படத்தின் பாடல்கள் வெளியானது. இப்படத்தில் த்ரிஷாவுக்குப் பதிலாக ஐஸ்வர்யா ராஜேஷை நடிக்கவைத்திருக்கின்றனர். 

ஐஸ்வர்யா ராஜேஷ்

இதுகுறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது ``இந்தப் படத்துல த்ரிஷா பண்ண கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். ஃபர்ஸ்ட் பார்ட்ல  த்ரிஷா பண்ண மேஜிக்க நான் பண்ண முடியாது. ஹரி சார் என்கிட்ட இந்த ரோல் பத்தி சொல்லும்போது நான் ரொம்ப பயந்தேன். ஹரி சார் ரொம்ப நம்பிக்கையா இருந்தாங்க. ஒரு சின்ன ரோல்தான், ஆனா ரொம்ப பவர்ஃபுல்லான ரோல். ஒரு 15 வருஷத்துக்கு முன்னாடி 'சாமி' படத்துல வரும் த்ரிஷாவைப் பார்த்து பிரமிச்சு இருக்கேன். அவங்க பண்ண கதாபாத்திரத்தை நான் எடுத்துப் பண்றது எனக்கு ரொம்பப் பெருமை" என்றார்.      

த்ரிஷா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!