``பெண்களை மையமாக வைத்த கதைகளுக்கு வெப் சீரீஸ் சரியாக இருக்கும்” - இயக்குநர் ராம்

வலைதளம் மற்றும் ஆன்லைன் செயலிகளின் (OTT) பிளாட் ஃபார்ம்களில் தொடர்கள் பார்க்கும் கலாசாரம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சமீபத்தில் நெட்ஃப்லிக்ஸில் அனுராக் காஷ்யாப் இயக்கத்தில் வெளியான ’சேக்ரெட் கேம்ஸ்' வெப் சிரீஸ் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் நெட் ஃப்ளிக்ஸ் சந்தாதாரர்கள் கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளது.

கள்ளச்சிரிப்பு

அந்த வரிசையில் 'zee5' நிறுவனம் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் ஒரிஜினல்ஸ் இணைந்து தயாரிக்கும் 'கள்ளச்சிரிப்பு' தொடர் நேற்று வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர்கள் வசந்த், பார்த்திபன், ராம், புஷ்கர் காயத்ரி, ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா ஆகியோர் பங்கேற்றனர்.

தொடரின் இரண்டு எபிசோடுகளின் பிரத்யேக திரையிடலுக்குப் பிறகு பேசிய இயக்குநர் ராம் ``பெண்களை மையமாகக் கொண்ட  கதைகளை முன் வைப்பதற்கு சரியான ஒரு தளமாக வெப் சீரிஸ் ப்ளாட் ஃபார்ம்கள் உதவும். சினிமாக்கள் கதாநாயகர்களை மையமாக வைத்துதான்  வருகிறது" என்றார்.

ராம்

இயக்குநர் பார்த்திபன் பேசுகையில் `` சிறு எபிசோடுக்கு கதை எழுதுவது மிகக் கடினமானது. அதேபோல் இந்த மொத்த வெப் சிரீஸ் எடுத்த விதமும் எனக்கு பிரமிப்பாகவுள்ளது" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!