நேஷ்னல் ஜியோகிராஃபிக் சேனலில் கமல்ஹாசன், விராட் கோலி!

பிரபல தகவல் சார் பொழுதுபோக்குச் சேனலான நேஷ்னல் ஜியோகிராஃபிக் சேனலில் `மெகா ஐகான்ஸ் ' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. இதில் வெவ்வேறு துறைகளிலிருந்து நபர்களை தேர்ந்தெடுத்து, அவர்களது வெற்றிக்குப் பின்னால் இருக்கும் பயணத்தையும், அவர்கள் கொண்டிருந்த அனுவபவங்களை ஆவணப்படமாக ஒளிபரப்புவார்கள்.

கமல்ஹாசன்

செப்டம்பரில் ஒளிபரப்பாகவுள்ள ` மெகா ஐகான்ஸ்' நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்டப் பல பிரபலங்களின் வாழ்க்கையில் நடந்த மைல்கல்லான விஷயங்கள் குறித்தும் ஒவ்வொரு நாளும் அவர்கள் வாழ்க்கை எப்படி அமைக்கப் பெற்றிருக்கிறது என்பதையும் அறிவியல்பூர்வமாகவும் காட்டப்படும். 

பல வருடங்களாக நடந்து வரும் இந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் எலொன் மஸ்க், ஹாலிவுட்டைச் சேர்ந்த ரான் ஹோவர்டு ஆகியோரது வாழ்க்கைப் பதிவுகளை `மெகா ஐகான்ஸ்' நிகழ்ச்சி காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!