மோகன்லாலை சிறப்பு விருந்தினராக அழைக்கக்கூடாது! - 107 நடிகர்கள் கேரள முதல்வருக்கு மனு

லையாள சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மோகன்லாலை அழைக்கக்கூடாது என தமிழ் நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட 107 பேர் முதல்வர் பினராயி விஜயனுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

மோகன்லால்

மலையாள திரை உலகில் ஸ்டார் நடிகராக வலம் வருபவர் மோகன்லால். மலையாள சினிமா நடிகர்கள் சங்கமான `அம்மா' வின் தலைவராகவும் மோகன்லால் இருக்கிறார். இந்த நிலையில், விரைவில் நடக்க இருக்கும் மலையாள சினிமா விருதுகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக மோகன்லால் கலந்துகொள்வதாக தகவல் வெளியானது. கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமைதாங்கி விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மோகன்லாலை அழைக்கக்கூடாது என தமிழ் நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடிகர்கள், சினிமா செய்தியாளர்கள் உள்ளிட 107 பேர் கேரள முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு மனு அளித்துள்ளனர்.

பிரகாஷ்ராஜ்

மலையாளத்தின் ஸ்டார் நட்சத்திரங்களான மோகன்லால், மம்முட்டி ஆகியோருக்கு எதிராக யாரும் இதுவரை கருத்து தெரிவித்தது இல்லை. ஆனால், பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட திலீபை  மீண்டும் மலையாள நடிகர் சங்கத்தில் சேர்த்ததைத் தொடர்ந்தே மோகன்லாலுக்கு எதிராக பல கருத்துகள் கூறப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!