வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (24/07/2018)

கடைசி தொடர்பு:13:18 (24/07/2018)

`பிக் பாஸில் என் ஓட்டு ஷாரிக்கிற்குதான்' - உமா ரியாஸுக்கு உறுதியளித்த நடிகர் பிரபு!

பிக் பாஸில் எனது ஓட்டு ஷாரிக்கிற்குதான் என நடிகர் பிரபு தெரிவித்துள்ளார். 

நடிகர் பிரபு

சாமி படத்தின் இரண்டாம் பாகமாக `சாமி ஸ்கொயர்' உருவாகி உள்ளது. இதில் மீண்டும் விக்ரமுடன் இயக்குநர் ஹரி கைகோத்துள்ளார். மேலும், விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். த்ரிஷா கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, பிரபு, சூரி, உமா ரியாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், சாமி முதல்பாகத்தில் வில்லனாக நடித்த கோட்டா ஶ்ரீநிவாசராவ் கதாபாத்திரத்தின் மகனாக பாபி சிம்ஹா இரண்டாம் பக்கத்தில் கலக்கியிருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பலர் கலந்துகொண்டு பேசினர். 

அதன்படி, பேசிய நடிகர் பிரபு, ``இயக்குநர் ஹரியை அனைவருக்கும் பிடிக்கும். அனைவரும் விரும்பும் வகையில் படங்களை இயக்கி வருகிறார். இதனால் அவர் மீது அனைத்து தயாரிப்பாளர்களும் நம்பிக்கை வைக்கின்றனர். தாமிரபரணி படத்துக்குப் பிறகு என்னை இப்படத்தில் நடிக்க வைத்ததற்கு மகிழ்ச்சியாக உள்ளது. விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி என ஓர் அருமையான கூட்டணியுடன் இணைந்தது ரொம்ப, ரொம்ப சந்தோஷமா இருக்கு. சிவாஜி, கமலுக்குப் பிறகு விக்ரமின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. விக்ரம் தமிழ்நாட்டின் பொக்கிஷம்" என்றார்.

ஷாரிக்

முன்னதாக படத்தில் நடித்துள்ளவர்களைப் பற்றி பேசும்போது, உமா ரியாஸ் பற்றியும் பேசினார். அதில், ``உமா ரியாஸ் நடிப்பு  எனக்கு ரொம்பப் பிடிக்கும். பிக் பாஸில் எனது ஓட்டு உனது மகன் ஷாரிக்கிற்கு தான்" என்று கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க