வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (24/07/2018)

கடைசி தொடர்பு:15:10 (24/07/2018)

`வர்மா' படத்துக்கு இசையமைக்கும் ரதன்!

Arjun Reddy

கடந்த ஆண்டு தெலுங்கில் விஜய் தேவரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே நடித்து வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படம் விரைவில் தமிழில் வெளியாகவிருக்கிறது.

வர்மா

இதை பாலா இயக்கிவருகிறார். விக்ரமின் மகன் துருவ் இதில் ஹீரோவாக அறிமுகமாகிறார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாடல் மேகா கதாநாயகியாக கமிட்டாகியிருக்கிறார். 'வர்மா' எனப் பெயரிடப்பட்ட இப்படத்துக்கு, 'ரதன்' எனும் தெலுங்குப் பட இசையமைப்பாளர் இசையமைக்கிறார். இவர்தான் 'அர்ஜுன் ரெட்டி' படத்துக்கும் இசையமைத்தவர். இவர் ஏற்கெனவே தமிழில் 'விகடகவி', 'வாலிபராஜா', 'டார்லிங்-2' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். மேலும், மேகா ஆகாஷ் மற்றும் அதர்வா நடித்துவரும் 'பூமராங்' படத்துக்கும் இவர் இசையமைக்கிறார்.