ஆர்மோனியப் பெட்டி, பாப் பாடல்.. வைரலாகும் 10 வயது இந்திய சிறுவன்  | 10 year old NRI boy singing bollywood and pop with harmonium

வெளியிடப்பட்ட நேரம்: 07:20 (25/07/2018)

கடைசி தொடர்பு:07:20 (25/07/2018)

ஆர்மோனியப் பெட்டி, பாப் பாடல்.. வைரலாகும் 10 வயது இந்திய சிறுவன் 

உலகம் முழுவதும் ரியாலிட்டி  நிகழ்ச்சிகள் பல திறமைசாலிகளை உலகுக்கு அடையாளம் காட்டியுள்ளது. அப்படி ஒரு நிகழ்வு லண்டனில் நடந்தேறியுள்ளது. பிரபல தொலைக்காட்சியில் இசை ரியாலிட்டி நிகழ்ச்சியான 'The Voice Kids UK 2018' நடந்து வருகிறது.

ஆர்மோனியப் பெட்டி

 

நிகழ்ச்சியின் ஜூரிகளான 'பிளாக் ஐடு பீஸ்' பாடகர் வில்.ஐ.ஏம், டேனி ஜோன்ஸ், பிக்ஸி லாட் ஆகியோரை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் அசத்தியது யூடியூபில் படு வைரலாகப் பரவிவருகிறது. நிகழ்ச்சியின் முதல் சுற்றான பிளைன்ட்ஸ் ரவுண்டில் கிருஷ்ணா பாலிவுட் பாடலையும் பாப் பாடலையும் ஒரே மூச்சில் ஆர்மோனிய பெட்டியை வாசித்தபடி பாடியபோது அரங்கமே கைத்தட்டி ரசித்ததும். கிருஷ்ணா நடுவர்களுக்கு ஆர்மோனியப் பெட்டி வாசித்துக் காட்டியதும் அனைவரையும் கவர்ந்திருந்தது.

 

இதைத் தொடர்ந்து இரண்டாவது சுற்றில் கோல்டுப்ளேயில் வந்த 'சம்திங் ஜஸ்ட் லைக் திஸ்' பாடலை கோப் மற்றும் கோரி என்ற இரு சிறுவர்களுடன் சேர்ந்து பாடிய வீடியோவும் அனைவரையும் கவர்ந்தது. துரதிஷ்டவசமாக இந்தச் சுற்றில் கிருஷ்ணா வெளியேற்றப்பட்டார். ஆனால், அவரது வீடியோக்கள் தொடர்ந்து அதிகம் பகிரப்பட்டு வருகிறது.