பாகிஸ்தானிய இசை வரலாற்றில் முதன்முறையாகத் திருநங்கைகள்  

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தனக்கென்று ஒரு மதிப்பைக் கொண்டிருக்கிறது கோக் ஸ்டுடியோ இசை நிகழ்ச்சி. பாகிஸ்தானில் 10 சீசன்களைக் கடந்து வந்துள்ள கோக் ஸ்டூடியோ தனது 11-ம் சீசனுக்கான ப்ரோமோ பாடலை சமீபத்தில் வெளியிட்டது. பழம்பெரும் எழுத்தாளர் பைஸ் அஹமது ஃபைஸ் எழுதிய 'ஹம் தேக்கேங்கே' (Hum dekhenghe) வரிகளில் இந்த சீசனில் கலந்துகொள்ளும் 20-க்கும் மேற்பட்ட பாடகர்கள் பங்கு பெற்றனர்.

இசை

'ஒரு தேசம், ஒரு துடிப்பு, ஒரு இசை' என்ற ஐடியாவை அடிப்படையாக எடுத்து வைக்கப்பட்ட இந்த வீடியோவில் நக்மா, லக்கி என இரு திருநங்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். மேலும், அபிதா பர்வீன், அலி அஸ்மத், மொமின முஸ்தெகின் என முன்னணி இசைக்கலைஞர்களுடன் இவர்களைப் பாட வைப்பது என முடிவெடுத்தது பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது. நக்மா, லக்கி என்று பாலின வேறுபாட்டை களைந்தது மட்டுமில்லாமல் இந்து, கிறிஸ்துவர் என அனைத்து மதத்தின் கலவையாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!