வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (25/07/2018)

கடைசி தொடர்பு:09:00 (25/07/2018)

வெங்கட் பிரபு இயக்கிய முதல் குறும்படம்

நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் ஒரு டிஜிட்டல் வீடியோ பிளாட்பார்ம் தொடங்கப்பட்டு வருகிறது. நேற்றைய முன்தினம் தொடக்கப்பட்ட zee5ல் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் 'கள்ளச்சிரிப்பு' தொடர் வந்தது. நேற்றைய தினம் VIU என்ற புதிய ஆப் தொடங்கப்பட்டது. இதில் 'டோர் எண் 403', 'கல்யாணமும் கடந்து போகும்',' நிலா நிலா ஓடி வா' ஆகிய தொடர்களும், வெங்கட் பிரபு இயக்கியுள்ள 'மாஷா அல்லாஹ் கணேஷா' என்ற குறும்படம் மக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

குறும்படம்

இது குறித்து பேசிய வெங்கட் பிரபு ``வழக்கமா எல்லாரும் ஷார்ட் ஃபிலிம் எடுத்துட்டுதான் தமிழ் சினிமாவுக்கு வருவாங்க. நான் படங்கள் எடுத்துட்டு ஷார்ட்ஃபிலிம் எடுத்திருக்கேன். இது என்னோட முதல் ஷார்ட் ஃபிலிம். பாம்பே தாராவில இந்து-முஸ்லிம் கலவரத்தை சம்பந்தப்படுத்தின கதை இது. என்.டி.குமார் எழுதுன கதையுல நிறைய ஆராய்ச்சிகள் செஞ்சிருக்கோம். இப்படத்தின் வசனங்களை விஜி எழுதியிருக்கிறார். பிரவின் கே.எல் படத்தொகுப்புல, பிரேம்ஜி இசையமிச்சிருக்காரு. சென்சார் இருக்காது என்பதால் நாங்கள் சொல்ல வரும் விஷயங்களை அப்படியே ஆடியன்ஸுக்கு சொல்ல முடிகிறது." என்றார்.       

வெங்கட் பிரபு