`அலாவுதீனின் அற்புத கேமரா' பைலட் டீசர் வெளியீடு | vijay Antony released the pilot teaser of the Allaudeenin Arputha Camera

வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (25/07/2018)

கடைசி தொடர்பு:09:20 (25/07/2018)

`அலாவுதீனின் அற்புத கேமரா' பைலட் டீசர் வெளியீடு

2013-ம் ஆண்டு வெளியான ‘மூடர் கூடம்’ படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அறிமுக இயக்குநர் நவீன் இயக்கி, நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்பின் வெளிவரக் காத்திருக்கும் 'கொளஞ்சி' படத்தை இயக்கிய நவீன் சத்தமில்லாமல் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ படத்தை இயக்கி முடித்துவிட்டார். இதையடுத்து  அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிப்பில் விஜய் ஆண்டனியை வைத்து அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார். 

அலாவுதீனின் அற்புத கேமரா

'அலாவுதீனின் அற்புத கேமரா' படத்தில் ‘கயல்’ ஆனந்தி கதாநாயகியாக நடித்துள்ளார். இதை இயக்குநர்  நவீனே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘White Shadows புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரித்து இயக்கியுள்ளார். நடராஜன் சங்கரன் இப்படத்துக்கு  இசையமைத்து வருகிறார். சமீபத்தில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இந்நிலையில், படத்தின் பைலட் டீசரை இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார்.