வெளியானது சிவகார்த்திகேயன் நடிக்கும் 'சீமராஜா' படத்தின் சிங்கிள் ட்ராக்! | Vaaren Vaaren Seemaraja single track released

வெளியிடப்பட்ட நேரம்: 21:11 (25/07/2018)

கடைசி தொடர்பு:22:25 (25/07/2018)

வெளியானது சிவகார்த்திகேயன் நடிக்கும் 'சீமராஜா' படத்தின் சிங்கிள் ட்ராக்!

இசையமைப்பாளர் இமான் இசையில் வெளியாகவிருக்கும் 'சீமராஜா' படத்தின் 'வரேன் வரேன் சீமராஜா' என்று தொடங்கும் பாடலின் சிங்கிள் ட்ராக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

சீமராஜா

`வருதப்படாத வாலிபர் சங்கம்' `ரஜினி முருகன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய, இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் சீமராஜா. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகச் சமந்த நடிக்கிறார். அதே போல நெப்போலியன், சிம்ரன், சூரி, யோகிபாபு, மனோபாலா, இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கௌரவ தோற்றத்தில் நடிக்க உள்ளார். படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜா படத்தைத் தயாரிக்கிறார். கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதியோடு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் செப்டம்பர் மாதம் 13-ம் தேதி விநாயக சதுர்த்தி அன்று இந்தப் படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் சிங்கிள் ட்ராக் வீடியோ வெளியானது. `வரேன் வரேன் சீமராஜா' என்று தொடங்கும் இந்தப் பாடலை சூப்பர் சிங்கர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற திவாகர், செந்தில் ஆகியோர் பாடியுள்ளனர்.