வெளியிடப்பட்ட நேரம்: 21:25 (25/07/2018)

கடைசி தொடர்பு:22:03 (25/07/2018)

மெர்சலைத் தொடர்ந்து `சர்கார்' படத்தில் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார் விவேக்..!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் அனைத்துப் பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். 2015-ல் வெளியான 'எனக்குள் ஒருவன்' படம் மூலம் பாடலாசிரியராகத் தமிழ் சினிமாவுக்குள் கால் பதித்த இவர், அடுத்தடுத்து ஏராளமான படங்களுக்கு பாடல்கள் எழுதி புகழ்பெற்றார்.

விவேக்

குறிப்பாக, 'மெர்சல்' படத்தில் 'ஆளப்போறான் தமிழன்' என்ற இவரது பாடல் வரி உலகமெங்கும் வைரலாகி தமிழர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், அந்தப் படத்தில் 'நீதானே', 'மெர்சல் அரசன்', 'மேச்சோ' ஆகிய பாடல்களும் ஹிட்டானது. இவற்றைத் தொடர்ந்து, விஜய் - ஏ.ஆர்.ரஹ்மான் - விவேக் கூட்டணி 'சர்கார்' படத்தின் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறது. இதிலும் அனைத்துப் பாடல்களையும் இவரேதான் எழுதியிருக்கிறார்.  இதை, தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதோடு அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க