வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (26/07/2018)

கடைசி தொடர்பு:08:20 (26/07/2018)

பாகுபலி, தங்கல் படங்களைத் தொடர்ந்து சீனா செல்லும் `சுல்தான்'

சல்மான் கான், அனுஷ்கா ஷர்மா இணைந்த படம் 'சுல்தான்'. அலி அப்பாஸ் சஃபர் இயக்கிய இப்படத்தை சீன மொழியில் டப் செய்து ரிலீஸ் செய்யவிருக்கின்றனர். 

சுல்தான்

2016-ம் ஆண்டு ‘சுல்தான் ‘ திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகி வசூல் சாதனை புரிந்தது. `பஜிரங்கி பாய்ஜான்' படத்தைத் தொடர்ந்து இப்படம் வெளிவந்தது, சல்மான் கான் அனுஷ்கா ஷர்மாவுடன் முதன் முதலில் இணைவது என படம் நிறைய பேசப்பட்டது. சல்மான் அதன் பிறகு டியூப்லைட்டு, ரேஸ், 'பாரத்', 'தபங் 3' என பல்வேறு படங்களின் பெயர்களை அறிவித்து இருக்கிறார். இந்நிலையில், சுல்தான் படம்  சீன மொழியில் வெளியாகத் தயாராகி வருகிறது. வரும் ஆகஸ்டு மாதம் 8-ம் தேதி வெளியீட்டுக்காக சீன மொழியில் டப்பிங் செய்யும் வேலைகளை செய்து வருகிறது படக்குழு. பாகுபலி, தங்கல், பஜ்ரங்கி பாய்ஜான் ஆகிய படங்களைத் தொடர்ந்து சுல்தானும் சீனமொழியில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சுல்தான்