வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (26/07/2018)

கடைசி தொடர்பு:09:20 (26/07/2018)

தீபாவளிக்கு சர்கார் சோலோ ரிலீஸா?

ஜனவரி மாத தொடக்கத்தில் 'சர்கார்', 'என்.ஜி.கே', சண்டக்கோழி 2, `விஸ்வாசம்` என நான்கு படங்கள் தீபாவளிக்கு வருவதாக அறிவித்திருந்தனர். ``நாலும் பெரிய படங்க எப்படி 'ஒண்ணுக்கொண்ணு மோதும்', தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி வந்து மாத்துவாங்க" என்றது  மாதிரியும் சினிமா வர்த்தக வட்டம் பேசிக்கொண்டிருந்தன. 

சர்கார்

இந்நிலையில் சமீபத்தில் நடந்த மணியார் குடும்பம் ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குநர் சிவா 'விஸ்வாசம்' படம் பொங்கலுக்குத்தான் வரும் என்று கூறிவிட்டுச் சென்றார். ' சண்டக்கோழி 2 'படத்தின் வெளியீட்டுக்கேற்ற தேதி அக்டோபர் 18-ம் தேதி வெளிவரும் எனத் தயாரிப்பாளர் சங்க ரிலீஸ் ரெகுலேஷன் கமிட்டி கடிதம் கூறியது. 

சண்டக்கோழி 2

சூர்யாவின் என்.ஜி.கே விஜய்யின் சர்க்கார் படங்கள் கண்டிப்பாகத் தீபாவளிக்கு வரும் என்றிருந்த நிலையில் என்.ஜி.கே படம் தள்ளிப் போகும் நிலையில் உள்ளது. என்.ஜி.கே படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் இருந்த 'தீபாவளி 2018' என்ற டேக் இருந்தது. சமீபத்தில் வெளிவந்த செகண்டு லுக்கில் அந்த டேக் காணவில்லை. இயக்குநர் செல்வராகவன் உடல் நலக் குறைவால் அவதிப்படுவதால் எஞ்சியுள்ள படப்பிடிப்பு தாமதமாகும் நிலையுள்ளது. இதனால் என்.ஜி.கேவும்  தீபாவளிக்கு ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

என்.ஜி.கே

 

தற்போதைக்கு படப்பிடிப்பிலிருக்கும் 'சர்கார்' மட்டுமே தீபாவளிக்கு வருவதில் உறுதியாக இருக்கிறது