`மணிரத்னத்துக்கு ரெகுலர் செக்கப்தான்’ - உதவியாளர் தகவல்!

`காற்று வெளியிடை' படத்துக்குப் பிறகு விஜய்சேதுபதி, சிம்பு, அரவிந்த் சாமி, அருண் விஜய், ஜோதிகா எனப் பலரையும் வைத்து மும்முரமாக 'செக்கச்சிவந்த வானம்' படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார் மணிரத்னம். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கும் இந்தப் படத்தில் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடிப்பதால், படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது. இதற்கிடையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவ்வப்போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. 

மணிரத்னம்

இந்நிலையில், இன்று திடீரென மணிரத்னத்துக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல்கள் வந்தன. இதுகுறித்து மணிரத்னத்தின் உதவியாளர்  நித்யாவிடம் பேசினோம். `சார் நலமாக உள்ளார். அவர் உடல்நிலைக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. உடல்நலம் குறித்த ரெகுலர் செக்கப் எப்போதும் செய்வோம். அதற்காகத்தான் இன்று மதியம் மருத்துவமனைக்கு வந்தோம். தற்போது மருத்துவமனையில்தான் இருக்கிறோம். செக்கப் முடிந்தவுடன் வீட்டுக்குச் சென்றுவிடுவோம். மணிரத்னம் உடல்நலத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை'' என்றார்.  

முன்னர் `ராவணன்' படத்தின்போது மணிரத்னத்துக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன் பிறகு, 'ஓ காதல் கண்மணி' படத்தின் ரிலீஸுக்குப் பிறகும் மணிரத்னத்துக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அப்போது, டெல்லிக்குச் சென்று சிகிச்சைபெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!