சல்மான் கான் படத்துக்கு `நோ’! - அமெரிக்க மருமகள் ஆகிறார் ப்ரியங்கா 

ப்ரியங்கா சோப்ராவுக்கு விரைவில் டும் டும் டும் என்பதுதான் இன்றைய பாலிவுட் ஹாட் டாபிக். இந்த விஷயத்தைப் போட்டு உடைத்தது இயக்குநர் அலி அப்பாஸ் ஜாஃபர் தான்.

ப்ரியங்கா சோப்ரா
 

பாலிவுட் முன்னணி நட்சத்திரமான ப்ரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட்டில் படுபிஸி. இதனிடையே சல்மான் கானின் அடுத்த திரைப்படமான `பாரத்’ மூலம் மீண்டும் பாலிவுட்டில் கால் பதிக்க இருந்தார் ப்ரியங்கா. பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள `பாரத்’ திரைப்படத்தில் சல்மான் கான் ஐந்து வெவ்வேறு கெட்டப்புகளில் வந்து அசத்தவிருக்கிறார். அவருக்கு ஜோடியாக ப்ரியங்கா நடிப்பதாக இயக்குநர் ஜாஃபர் முன்னர் அறிவித்திருந்தார். ஆனால், ப்ரியங்கா `பாரத்’ திரைப்படத்தில் இருந்து விலகிக்கொண்டதாக ஜாஃபர் இன்று ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார். இந்த அதிர்ச்சி செய்தியுடன் கூடவே ஒரு இனிப்புச் செய்தியையும் போட்டு உடைத்துவிட்டார் ஜாஃபர். 

`ப்ரியங்கா சோப்ரா `பாரத்’ திரைப்படத்தில் இருந்து விலகிக்கொள்கிறார். அவர் விலகுவதற்கான காரணம் ரொம்ப ஸ்பெஷல். அவரின் முடிவு மிகமிகச் சரியானது. அவருக்கு பாரத் திரைப்படத்தின் சார்பாக வாழ்த்துகள். அவரின் எதிர்கால வாழ்க்கையில் காதலும், மகிழ்ச்சியும் நிறையட்டும்’ என்று பதிவிட்டுள்ள ஜாஃபர் ’நிக்’ என்னும் ஒரு வார்த்தையையும் குறிப்பிட்டு ட்வீட்டில் பொடி வைத்துள்ளார்.

ப்ரியங்கா சோப்ராவின் - நிக் ஜோனஸ் காதல் பற்றி பாலிவுட் வட்டாரம் கதைத்துக்கொண்டிருக்கும் வேலையில் `நிக்’ என்ற வார்த்தையைக் குறிப்பிட்டு ப்ரியங்கா - நிக் காதல் செய்தியை உறுதிப்படுத்தியிருக்கிறார் ஜாஃபர். விரைவில் ப்ரியங்கா - நிக் திருமண அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜாஃபரின் ட்விட்டர் பதிவு மூலம், திருமணத்துக்காகதான் ப்ரியங்கா பாரத் திரைப்படத்தில் இருந்து விலகியிருக்கிறார் என்று தெரிகிறது.

ப்ரியங்கா சோப்ரா
 

அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸ் ப்ரியங்காவைவிட பத்து வயது குறைந்தவர். இதை வைத்து ப்ரியங்காவின் ரசிகர்கள் தொடர்ந்து அவரை விமர்சித்து வந்தாலும், `ப்ரியங்காவின் தைரியமான முடிவு இது. ப்ரியங்கா - நிக் ஜோடி மிகவும் அழகான ஜோடி ’ என்று ப்ரியங்காவின் நெருங்கிய நண்பர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர். 

அண்மையில் மும்பைக்கு வந்த நிக், ப்ரியங்கா குடும்பத்துடன் நெருக்கமாகிவிட்டாராம். இரு குடும்பத்தினரும் நிக் - ப்ரியங்கா காதலுக்கு சம்மதம் தெரிவித்துவிட்டதால் விரைவில் திருமண தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹாலிவுட் பாலிவுட் என பறந்துகொண்டிருக்கும் ப்ரியங்கா சோப்ராவை திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியது தமிழ் சினிமாதான். வாழ்த்துகள் ப்ரியங்கா!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!