வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (27/07/2018)

கடைசி தொடர்பு:00:00 (28/07/2018)

”சாதி மதமென்னும் வியாதிய போக்கிட...” விஸ்வரூபம் 2 படத்தின் அடுத்த சிங்கிள் டிராக்!

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் விஸ்வரூபம் 2 படத்தின் மூன்றாவது சிங்கிள் டிராக் இன்று வெளியாகியுள்ளது. 

விஸ்வரூபம்

நடிகர் கமல்ஹாசன் நடித்து இயக்கும் படம் விஸ்வரூபம் 2. ஆண்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10 -ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கெனவே வெளியான நிலையில் இன்று மாலை மூன்றாவது சிங்கிள் ட்ராக் யும் வெளியிடப்பட்டுள்ளது. 

சாதி மதம் எனும் வியாதியை போக்கிட என்னும் இந்தப் பாடலை கமல்ஹாசன் எழுதியுள்ளார். சத்திய பிரகாஷ் மற்றும் ஆண்ட்ரியா பாடியுள்ளனர். இந்தப் பாடல் லிரிக்கல் வீடியோவாக வெளியாகியுள்ளது.  2015 -ல் வெளியான  `தூங்காவனம்' படத்துக்குப் பிறகு, கமல்ஹாசன் நடிப்பில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆதனால், 'விஸ்வரூபம் 2' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.