`அரசியல்வாதிகள் நேர்மையாக சமரசம் பேசினாலே தீவிரவாதம் ஓடிப்போய்டும்’ -விஸ்வரூபம் 2 படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் | Vishwaroopam 2 trailer has released

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (28/07/2018)

கடைசி தொடர்பு:23:00 (28/07/2018)

`அரசியல்வாதிகள் நேர்மையாக சமரசம் பேசினாலே தீவிரவாதம் ஓடிப்போய்டும்’ -விஸ்வரூபம் 2 படத்தின் இரண்டாவது ட்ரெய்லர்

கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம் 2 படத்தின் இரண்டாவது  ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. 

விஸ்வரூபம் 2

கமல்ஹாசன் இயக்கி, நடித்த `விஸ்வரூபம்' திரைப்படம், பல்வேறு தடைகளுக்குப் பிறகு கடந்த 2013-ல் வெளியானது. இந்தப் படத்தின் முதல் பாகம் எடுக்கும்போதே, இரண்டாம் பாகத்துக்கான 40 சதவிகித படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாகக் கூறப்பட்டது. படத்துக்கான பணிகள் முடிவடைந்த நிலையில் ஜூன் மாதம் 11-ம் தேதி விஸ்பரூபம் 2 படத்தின் முதல்  ட்ரெய்லர் வெளியானது. இந்தநிலையில், விஸ்வரூபம் 2 படத்தின் இரண்டாவது  ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த பாகத்தின் முடிவை முன்னுரையாகக் கொண்டு, இந்த  ட்ரெய்லர் தொடங்குகிறது. இந்த  ட்ரெய்லர்  முழுவதும் கமல் மற்றும் ஆண்ட்ரியாவின் ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. விஸ்வரூபம் 2 படம், வரும் ஆகஸ்ட் மாதம் 10 -ம் தேதி வெளியாகும் என முன்னரே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.