வெளியிடப்பட்ட நேரம்: 19:07 (30/07/2018)

கடைசி தொடர்பு:19:18 (30/07/2018)

`காதலே காதலே தனிப்பெரும் துணையே..!' - `96' படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீடு

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் `96' படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாகியுள்ளது. மெட்ராஸ் என்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் இந்தப் படத்தை, `நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்' படத்தின் ஒளிப்பதிவாளர் சி.பிரேம் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் டிராவல் போட்டோகிராஃபராக விஜய் சேதுபதியும் ஜானு என்ற கேரக்டரில் த்ரிஷாவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நடிகர் ஜனகராஜ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் டீசரில் இறுதியாக இடம்பெற்ற `காதலே காதலே தனிப்பெரும் துணையே’ என்ற பாடல்வரிகள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, இப்படத்தின் சிங்கிள் ட்ராக்காக அந்தப் பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்தப் பாடலை சின்மயி - இசையமைப்பாளர் கோவிந்த் மேனன் ஆகியோர் பாடியுள்ளனர்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க