`கடவுள் படைத்த கடைசி நல்லவனே!' - அரசியாவாதிகளை கலாய்க்கும் `தலைவர்துதி பாடல்'  | Annanukku Jey movie's Anjaa Nenjane Song Lyrical video released

வெளியிடப்பட்ட நேரம்: 01:03 (31/07/2018)

கடைசி தொடர்பு:01:03 (31/07/2018)

`கடவுள் படைத்த கடைசி நல்லவனே!' - அரசியாவாதிகளை கலாய்க்கும் `தலைவர்துதி பாடல்' 

அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ள `அண்ணனுக்கு ஜே' ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அப்படத்தின் லிரிக்கல் வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அரசியல்வாதிகளை கலாய்க்கும் விதமாக வெளியாகியுள்ள `அஞ்சா நெஞ்சனே' வரவேற்பை பெற்று வருகிறது.

அண்ணனுக்கு ஜே

இயக்குநர் வெற்றிமாறனின் அசிஸ்டன்டாக இருந்த ராஜ்குமார் தனது முதல்படமாக `அண்ணனுக்கு ஜே' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், மகிமா நம்பியார் ஹீரோ, ஹீரோயின்களாக நடித்துள்ளனர். ராதாரவி, மயில்சாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, வெற்றிமாறனே இப்படத்தைத் தயாரித்துள்ளார். மேலும், படத்துக்கு அரோல் கரோலி இசையமைத்துள்ளார். லோக்கல் அரசியலை மையப்படுத்தி கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகிய நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்நிலையில், இப்படத்தின் லிரிக்கல் வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில், `அஞ்சா நெஞ்சனே' என தொடங்கும் தலைவர்துதி பாடல்  அரசியால்வாதிகள் பெயர்களின் முன்பு சூட்டப்படும் பட்டங்களை தொகுத்து வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ளது. `அஞ்சா நெஞ்சனே', `மனிதர் குல மாணிக்கமே', `தரணி போற்றும் எங்கள் இறைவா', `கருணை வள்ளலே' என அரசியால்வாதிகளின் பட்டங்களை கலாய்க்கும் விதமாக இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்டனி தாசன் இப்பாடலை பாடியுள்ளார். இது தற்போது வரவேற்பை பெற்று வருகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க