பாலிவுட்டில் பாலியல் தொல்லையைச் சந்தித்திருக்கிறேன் - 'காற்று வெளியிடை' அதிதி ராவ்  | Aditi Rao Hydari says she faced Bollywood casting couch

வெளியிடப்பட்ட நேரம்: 07:15 (31/07/2018)

கடைசி தொடர்பு:09:01 (31/07/2018)

பாலிவுட்டில் பாலியல் தொல்லையைச் சந்தித்திருக்கிறேன் - 'காற்று வெளியிடை' அதிதி ராவ் 

எந்தத் துறையிலும் அதிகாரத்தில் இருப்பவர்கள், அதனைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. திரைத்துறையில் அதிகாரத் தவறுகளைப் பற்றி கட்டாயம் பேசுவேன் - அதிதி ராவ்

அதிதி ராவ்


காற்று வெளியிடை திரைப்படத்தின்மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான அதிதி ராவ், ஹிந்தியில் நிறையப் படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்டில் தானும் பாலியல் தொல்லையைச் சந்தித்ததாக வார இதழ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தற்போதுதான் ஶ்ரீ ரெட்டி திரைத்துறையில் இருக்கும் காஸ்டிங் கவுச் எனப்படும் பாலியல் தொல்லைகுறித்து பகிரங்கமான கருத்துகளைக் கூறிவரும் நிலையில், அதிதி ராவின் இந்தக் கருத்து கவனிக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை திரைப்பட வாய்ப்புக்காக நடிகைகள் பாலியல் தொல்லைகளுக்கு கட்டாயப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் வருகின்றன. உலகப் பிரபலங்கள்கூட இதில் அடங்குவர். 

இதுகுறித்து கூறியுள்ள அதிதி ராவ் , "நான் எனது முடிவில் உறுதியாக இருந்தேன். இதனால், எனது வேலையைக்கூட இழந்தேன். அந்த நேரத்தில் நிறைய அழுதேன். அதற்காக வருத்தப்படவில்லை. உண்மையில், பெண்களை இப்படி நடத்துவதுதான் அழவைத்தது. என்னிடம் தகாத முறையில் பேசுவதற்கான தைரியம் எப்படி வந்தது? அந்தச் சம்பவத்துக்கு எட்டு மாதம் வேலைக் கிடைக்காமல் இருந்தேன். என்ன செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இதுபோன்ற சம்பவங்களை எதிர்கொள்ள வேண்டும். அப்போதுதான், அடுத்து ஏதாவது நிகழ்ந்தாலும் அதைக் கையாள முடியும். வேலை கிடைக்கவில்லையெனில் பயப்படாமல் இருங்கள். சரியான நபர்கள் உங்கள் திறமைகளை அடையாளம் கண்டுகொள்வர். காத்திருக்க வேண்டும். எந்தவொரு துறையிலும் அதிகாரத்தில் இருப்பவர்கள் அதைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. திரைத்துறையில் அதிகாரத் தவறுகளைப் பற்றி கட்டாயம் பேசுவேன். என் குடும்பத்தினர் அப்போது எனக்கு பக்கபலமாக இருந்தனர். பெண்கள் அனைவரும் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இதுபோன்ற விசயங்களை எளிதில் சமாளித்து, தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். அப்போதைய நபர்களின் பெயர்களை இப்போது நான் கூற விரும்பவில்லை. இதெல்லாம் மாற வேண்டும்" என்று கூறியுள்ளார். 


[X] Close

[X] Close