ராதாமோகன் - இளையராஜா - விக்ரம் பிரபு காம்போவில் உருவாகும் `60 வயது மாநிறம்’

விக்ரம், தமன்னா நடிப்பில் வெளியான 'ஸ்கெட்ச்' படத்தைத் தொடர்ந்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் அடுத்தப் படம் பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகும் என அறிவித்திருந்தனர். விக்ரம் பிரபு, சமுத்திரகனி, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு '60 வயது மாநிறம்' எனப் பெயரிட்டுள்ளனர்.

விக்ரம் பிரபு

இயக்குநர் ராதாமோகன் இயக்கி இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்தப் படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர். 'பக்கா' படத்துக்குப் பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ராதாமோகன், இளையராஜா, விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ் என வித்தியாசமான காம்போவில் உருவாகும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!