வெளியிடப்பட்ட நேரம்: 05:08 (01/08/2018)

கடைசி தொடர்பு:10:28 (01/08/2018)

"உலகம் போதுமான சூப்பர் ஹீரோக்களைக் கொண்டுள்ளது" - 'வெனோம்' திரைப்படத்தின் புதிய ட்ரெய்லர்!

மார்வெல் வெனோம்

மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரமான எட்டி ப்ரோக் எனப்படும் 'வெனோம்' (Venom), 2007-ம் ஆண்டு வெளியான 'ஸ்பைடர் மேன் - 3' படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்பைடர் மேனின் வில்லனாக அந்தப் படத்தில் பார்த்திருப்போம். அந்த வெனோம் கதாபாத்திரத்தை வைத்து முழுநீளப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமும் மார்வெல் என்டர்டெயின்ட்மென்ட் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். மார்வெல் கதாபாத்திரம்தான் என்றாலும், கொலம்பியா பிக்சர்ஸும் சோனி பிக்சர்ஸும்தான் இந்தப் படத்தை உருவாக்குவதில் முனைப்புடன் இருந்தனர். டாம் ஹார்டி, மிச்செல்லி வில்லியம்ஸ் இன்னும் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தை ஸோம்பிலேண்ட் இயக்குநர் ரூபன் ஃப்ளைஷர் இயக்கியுள்ளார். இப்படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. "உலகம் போதுமான சூப்பர் ஹீரோக்களைக் கொண்டுள்ளது" என்ற டேக்லைனுடன் வெனோம் என்ற ஆண்டிஹீரோவை ட்ரெய்லர் முன்வைக்கிறது. முதன்முறையாக, மார்வெல்லில் இருந்து ஒரு ஆன்டி ஹீரோ கதாபாத்திரத்தின் முழுநீளத் திரைப்படம். 'வெனோம்' இந்த வருடம் அக்டோபர் 5 -ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது