வெளியிடப்பட்ட நேரம்: 19:25 (01/08/2018)

கடைசி தொடர்பு:19:25 (01/08/2018)

வரலாற்றுப் பின்னணியில் பிரமாண்டத் திரைப்படம்..! இந்தித் திரையுலகில் கால்பதிக்கும் பா.ரஞ்சித்

வரலாற்றுப் பிண்ணனி கொண்ட பிரமாண்ட இந்திப் படத்தை பா.இரஞ்சித் இயக்கவுள்ளார்.

பா.ரஞ்சித்

`அட்டக்கத்தி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான பா.ரஞ்சித், `மெட்ராஸ்' படத்தையடுத்து, ரஜினிகாந்தை வைத்து, கபாலி, காலா படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று, அவருக்குப் பெயர் வாங்கிக் கொடுத்தது. இரண்டு படங்களும் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தநிலையில், இந்தித் தயாரிப்பு நிறுவனம் நமா பிக்சர்ஸ், ரஞ்சித்தின் பணியைக் கண்டு வியந்துள்ளது. அதையடுத்து, ரஞ்சித் இயக்கத்தில் படம் தயாரிப்பதற்கு விரும்பியுள்ளது. நமா பிக்சர்ஸ் தயாரிப்பில், உண்மைக் கதையை மையமாகக் கொண்ட வரலாற்று  பின்னணியில் இந்தித் திரைப்படம் ஒன்றை ரஞ்சித் இயக்கவுள்ளார். அந்தப் படம் அடுத்த ஆண்டு திரைக்குவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரமாண்டமான வரலாற்று படத்தின் மூலம் ரஞ்சித் இந்தி சினிமாவில் கால்பதிக்கவுள்ளார்.