`சில மனிதர்கள்; பல ரகசியங்கள்!’ - நரகாசூரன் பட டிரெய்லர் | Karthick Narens Naragasooran trailer released

வெளியிடப்பட்ட நேரம்: 19:19 (01/08/2018)

கடைசி தொடர்பு:19:19 (01/08/2018)

`சில மனிதர்கள்; பல ரகசியங்கள்!’ - நரகாசூரன் பட டிரெய்லர்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அர்விந்த் சாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா உள்ளிட்டோர் நடித்துள்ள நரகாசூரன் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது. 

நரகாசூரன்
 

`துருவங்கள் பதினாறு' படம் மூலம் கவனம் ஈர்த்த இளம் இயக்குநர் கார்த்திக் நரேன், அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நரகாசூரன் என்ற பெயரில் புதிய படத்தை இயக்கியிருந்தார். இதில், அரவிந்த் சுவாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மியா, இந்தர்ஜித் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

ஷூட்டிங் நிறைவடைந்து பல நாள்களாகியும் படம் வெளியாவது குறித்த அறிவிப்பு எதுவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது. தயாரிப்பாளர் கௌதம் மேனன் மற்றும் இயக்குநர் கார்த்திக் நரேன் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே படம் கிடப்பில் போடப்பட்டதாகப் பேசப்பட்டது. இந்த நிலையில், படம் சமீபத்தில் தணிக்கைச் சான்றிதழுக்கு அனுப்பப்பட்டு யு/ஏ சான்றிதழ் பெற்றது. ஆனால், தயாரிப்பாளர் இடத்தில் கௌதம் மேனன் பெயர் இடம்பெறவில்லை. இந்தப் படம் ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. த்ரில்லர் வகையில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.