வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (02/08/2018)

கடைசி தொடர்பு:10:40 (02/08/2018)

2019ல் வெளியாகும் 'அர்ஜூன் ரெட்டி' இந்தி ரீமேக்!

அர்ஜுன் ரெட்டி

கடந்த ஆண்டு வெளியான அர்ஜூன் ரெட்டியை தெலுங்கு சினிமா ரசிகர்கள் மட்டுமில்லாமல் பல்வேறு மொழி ரசிகர்களும் கொண்டாடினர். தெலுங்கு சினிமாவின் முக்கியமான படமாகப் பலரும் கருதினர். வசூலிலும் சாதனைபடைத்தது. இதில் கிடைத்த புகழை அடுத்து விஜய் தேவ்ரகொண்டா தமிழில் 'நோட்டா' படத்தில் நடித்துவருகிறார். அர்ஜூன் ரெட்டி திரைப்படம் வெளியான கொஞ்ச நாள்களிலேயே அதன் ரீமேக் உரிமையை வாங்குவதில் மிகப்பெரிய போட்டியே ஏற்பட்டது. ஏற்கெனவே, விக்ரமின் மகன் துருவ் நடிக்க, பாலா இயக்கத்தில் அர்ஜுன் ரெட்டி தமிழில் ரீமேக் ஆகிவருகிறது. தற்போது, பாலிவுட்டிலும் அர்ஜூன் ரெட்டி ரீமேக் ஆக உள்ளது. அதற்கான அறிவிப்பு ஒன்றை டி-சீரிஸ் நிறுவனம் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தில் விஜய் தேவ்ரகொண்டா கேரக்டரில் பிரபல ஹீரோ ஷாகித் கபூர் நடிக்க உள்ளார். இப்படம், 2019 ல் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.