வெளியிடப்பட்ட நேரம்: 12:08 (02/08/2018)

கடைசி தொடர்பு:12:16 (02/08/2018)

பாலாஜிக்கு ஐஸ்வர்யா கொடுத்த தண்டனை..! - நித்யா சொல்வது என்ன? #BiggBoss

பிக் பாஸ் நிகழ்ச்சி சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. `சர்வாதிகார ஆட்சி’ என்னும் கான்செப்டைப் பிடித்து, பிக் பாஸ் வீட்டில் உச்சபட்ச சூட்டைக் கிளப்பிவிட்டிருக்கிறார் பிக் பாஸ். 

ஐஸ்வர்யா
 

கடந்த இரண்டு நாள்களாக, பாலாஜியைத் தவிர பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ஐஸ்வர்யா கட்டுப்பாட்டில் உள்ளனர். பாலாஜி ஒத்துழையாமை இயக்கத்தைக் கையில் எடுத்திருக்கிறார். தண்டனை என்னும் பெயரில் பாலாஜி மீது  `ராணி’ ஐஸ்வர்யா, குப்பைக்  கொட்டியது, சக போட்டியாளர்கள் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. போதாதென்று ரித்விகா மீது ஐஸ்வர்யா வீசிய நிறவெறியைத் தூண்டும்படியான கடுஞ் சொற்கள், பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில், கடந்த இரண்டு நாள்களாக  ஐஸ்வர்யாவை வசைபாடிக்கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்ஸ்.  

பாலாஜி


பாலாஜி சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், நித்யாவின் கருத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்தது. நித்யாவின் ஃபேஸ்புக் பக்கம் சென்று பார்த்தால்...   `சர்வாதிகாரம்’ டாஸ்க் பற்றி பக்கம்பக்கமாக கிழித்துத் தொங்கவிட்டிருக்கிறார் நித்யா.

நித்யா பாலாஜி
 

அவரின் பதிவு... `என்னால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பாலாஜி மீது குப்பையைக் கொட்டியது மனிதத்தன்மையற்ற குரூரமான செயல். தரக்குறைவான செயல். ரித்விகா மீது ஐஸ்வர்யா பயன்படுத்திய இழிவான சொற்கள் மிகவும் தவறு. ஐஸ்வர்யா, அவரின் தவற்றை உணருவார் என்று நம்புகிறேன். பாலாஜி, ஐஸ்வர்யாவைத் திட்டியது தவறுதான். அவர் சார்பில் ஐஸ்வர்யா குடும்பத்தாரிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

நான் ஒருவேளை பிக் பாஸ் வீட்டில் இருந்திருந்தால், ஐஸ்வர்யாவை கொஞ்சம் விவேகமாக நடந்துகொள்ளச் சொல்லியிருப்பேன். ஐஸ்வர்யா, பாலாஜிக்கு அந்தத் தண்டனை கொடுத்தபோது, பொன்னம்பலம் அண்ணா தட்டிக் கேட்டிருக்கலாம். மும்தாஜ் அழுவதற்குப் பதில் ஐஸ்வர்யாவை கேள்வி கேட்டிருக்கலாம். ரித்துவை ஐஸ்வர்யா திட்டியபோது எதிர்த்து நின்றிருக்கலாம். பாலாஜி தன் கோபத்தையும் பிறரைத் தகாத வார்த்தைகளால் திட்டுவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்’   இவ்வாறு கொட்டித் தீர்த்திருந்தார்.

நித்யாவிடமே பேசினோம்..  `நல்ல வேளை, நான் இப்போ பிக் பாஸ் வீட்டுக்குள் இல்லை. இருந்திருந்தா ரொம்ப கோபப்பட்டிருப்பேன். இந்த டாஸ்க் முடியட்டும்னு காத்துட்டு இருக்கேன். அப்போதான் என்ன நடக்குதுன்னு முழுசா தெரியவரும். அதுவரை இந்த விவகாரம் குறித்துப் பேச வேண்டாம்னு நினைக்கிறேன்’ என்றார்.  

நாங்களும் அதுக்காகத்தான் வெயிட் பண்றோம்!  

நீங்க எப்படி பீல் பண்றீங்க