34 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு - சிக்கினார் மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு படத்தின் இயக்குநர்!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கி வரும் இயக்குநர் விஜய் கட்டே திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். 

இயக்குநர் விஜய் கட்டே

முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங். இவர் பத்து ஆண்டுகள் பிரதமராக இருந்தார். இவரது வாழ்க்கை குறித்த புத்தகம் 2014-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதை சஞ்சய் பாரு என்பவர் எழுதியிருந்தார். இதில், மன்மோகன் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. இந்தப் புத்தகத்தை தழுவி திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது. `தி ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் மன்மோகன் சிங்காக பிரபல நடிகர் அனுபம் கேர் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக திவ்யா சேத் ஷா நடிக்க இயக்குநர் விஜய் கட்டே இயக்கி வருகிறார்.

இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் விஜய் கட்டேவை வருவாய்ப் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். விஜய் கட்டே நடத்தி வரும் வி.ஆர்.ஜி டிஜிட்டல் கார்ப்பரேசன் நிறுவனம் 34 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படுகிறது. போலி பில்கள் மூலம் இந்த வரி ஏய்ப்பு நடந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது கைது பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!