`எச்சரிக்கை' - லட்சுமி குறும்பட இயக்குநரின் புதிய படத்தின் இரண்டாவது ட்ரெய்லர்! | The second trailer of movie Echarikkai was released

வெளியிடப்பட்ட நேரம்: 18:24 (04/08/2018)

கடைசி தொடர்பு:18:34 (04/08/2018)

`எச்சரிக்கை' - லட்சுமி குறும்பட இயக்குநரின் புதிய படத்தின் இரண்டாவது ட்ரெய்லர்!

எச்சரிக்கை: இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

எச்சரிக்கை

 `லட்சுமி’ மற்றும் ’மா’ ஆகிய இரண்டு குறும்படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் அதிக கவனம் பெற்றவர் இயக்குநர் சர்ஜுன். இவர் இயக்கும் புதிய படம் `எச்சரிக்கை': இது மனிதர்கள் நடமாடும் இடம்’. சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், கிஷோர், விவேக் ராஜகோபால், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை சி.பி.கணேஷ் தயாரிக்கிறார். சுந்தரமூர்த்தி கே.எஸ் இசையமைக்கிறார். 

இந்தப் படத்தின் முதல் ட்ரெய்லர் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியான நிலையில் இப்படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. த்ரில்லர் படமாக உருவாகி வரும், இதன் இரண்டாவது ட்ரெய்லரும் ஆக்‌ஷன் காட்சிகளுடன் பரபரப்பாக வெளிவந்துள்ளது. இந்தப் படம் இம்மாதம் 24-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.