வெளியிடப்பட்ட நேரம்: 18:34 (04/08/2018)

கடைசி தொடர்பு:18:35 (04/08/2018)

`சர்வாதிகார டாஸ்க்!’ - பிக் பாஸ் மேடையில் கோட்டை கழட்டி எறிந்த கமல் #BiggBoss

பிக் பாஸ் வீட்டில் கடந்த சில நாள்களாக நடந்த சர்வாதிகார ஆட்சிக்கு கமலின் ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சற்றுமுன் வெளியான இன்றைய நிகழ்ச்சியின் ப்ரோமோ எதிர்பார்ப்பை இன்னும் கூட்டியுள்ளது.

கமல்
 

சர்வாதிகாரம் என்னும் டாஸ்க் வைத்து பிக் பாஸ் வீட்டில் சூட்டை கிளப்பிவிட்டார் `பிக் பாஸ்.' சர்வாதிகாரியாக நியமிக்கப்பட்ட ஐஸ்வர்யா சர்வாதிகார ராணியாகவே மாறிவிட்டார். 

வார இறுதியில் பிக் பாஸ் வீட்டுக்குள் அந்த வாரம் முழுவதும் நடந்த விவகாரங்களை விசாரிக்கும் கமலின் விசாரணைக் கமிஷனுக்கு இந்த வாரம் ஓவர் ட்யூட்டி பார்க்கும் அளவுக்கு வழக்குகள் உள்ளன. தண்டனை என்னும் பெயரில் பாலாஜி மீது குப்பைக் கொட்டியது, ரித்விகா மீது வீசிய நிறவெறியைத் தூண்டும்படியான கடும்சொற்கள் என விசாரணை ஆணையத்துக்கு அதிக வேலை கொடுத்திருப்பவர்  `ராணி’ ஐஸ்வர்யாதான். மேலும், இந்த வார டாஸ்க்கில் ரசிகர்களின் வெறுப்பையும் அதிகம் சம்பாதித்துவிட்டார் ஐஸ்வர்யா

இந்நிலையில், சற்றுமுன் விஜய் டிவி வெளியிட்டுள்ள ப்ரோமோவில் கமல் தான் அணிந்திருக்கும் கோட்டை ஆவேசமாக மேடையில் வீசி எறிகிறார். மேலும், சர்வாதிகார கேரக்டரிலிருந்து வெளில வாங்க ஐஸ்வர்யா’ என்று கடுகடுக்கிறார். பிக் பாஸ் ரசிகர்களுக்கு இன்று இரவு  `செம என்டர்டெயின்மென்ட்’ காத்துக்கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமேயில்லை. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க