வெளியிடப்பட்ட நேரம்: 04:34 (05/08/2018)

கடைசி தொடர்பு:04:34 (05/08/2018)

`இப்ப தான் ஆத்ம திருப்தியோட இருக்கேன்' - `மேற்குத் தொடர்ச்சி மலை' படம் குறித்து மனம் திறக்கும் விஜய் சேதுபதி!

`மேற்குத் தொடர்ச்சி மலை' படம் வெளியாகவுள்ள நிலையில் அது தொடர்பான புரோமோஷன் வீடியோ ஒன்றை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பளார் அவதாரம் எடுத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் `மேற்குத் தொடர்ச்சி மலை'. `வெண்ணிலா கபடி குழு', 'நான் மகான் அல்ல' படங்களில் இணை இயக்குநராகப் பணிபுரிந்தவரும் அறிமுக இயக்குநருமான லெனின் பாரதி இப்படத்தை இயக்கியுள்ளார். மேற்குத் தொடர்ச்சி மலை மீது வாழ்கின்ற நிலம் அற்ற உழைக்கும் மக்களின் கதை குறித்து படத்தில் பேசப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். ரிலீஸுக்கு தயார் நிலையில் உள்ள இப்படம் பல்வேறு நாடுகளின் சினிமா விழாக்களிலும் திரையிடப்பட்டு விருதுகளை குவித்து வருகிறது. விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் படத்தை புரோமோஷன் செய்யும் விதமாக படம் குறித்து விஜய்சேதுபதி பேசிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

அதில், ``இது எளிய மக்களுக்கான படம். ஒரு அழகான வாழ்க்கை மூலமா, வாழ்வியல் மூலமா படம் சொல்லப்பட்டிருக்கிறது. படம் ரொம்ப அழகா வந்துருக்கு. என்ன பொறுத்தவரை இந்த மாதிரி ஒரு படம் பண்ணுனதுல ஆத்ம திருப்தியோட இருக்கேன். மன நிறைவோட இருக்கேன். அதுக்கு லெனினுக்கு தான் நன்றி சொல்லனும். இந்தப் படத்தோட கதையை கேட்டு பணிபுரிய முன்வந்த இசைஞானி இளையராவுக்கும் நன்றி. நம்மை போன்ற முகங்கள் தான் இதில் நடிச்சுருக்காங்க. படம் நிறையா உங்ககிட்ட பேசனும்னு நம்புறேன். அது உங்களுக்கு சேரணும். நான் ஒரு நல்லப் படம் எடுத்திருக்கேனு நம்புறேன். எல்லோரும் திரைக்கு வந்து இப்படத்தை பாக்கணும்" எனக் கூறியுள்ளார்.  

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க