Published:Updated:

எலைட் எருமை டோன்ட் டிஸ்டர்ப்!

கே.ராஜாதிருவேங்கடம்

எலைட் எருமை டோன்ட் டிஸ்டர்ப்!

கே.ராஜாதிருவேங்கடம்

Published:Updated:
##~##

''யப்பா... இப்பத்தான் 'வாங்க சினிமாப் பத்தி பேசலாம்’ ஷூட் ஆரம்பிச்சாங்க. எனக்கே பரபரப்பா படபடப்பா இருக்கு... கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிட்டு நானே பிரேக்ல கூப்பிடுறேன்!'' - இயக்குநர் பாக்யராஜ்.

   ''வாட் கொஸ்டீன்..? ஜி.கே... ஓ.கே! வெய்ட் டென் மினிட்ஸ். அம்மாவைப் பக்கத்துல வெச்சுக்குறேன்!'' - நடிகை ஹன்சிகா மோத்வானி.

  ''இந்த வாரம் நான் சிக்கிட்டேனா?'' - தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன்.

  ''நண்பா... நான் சரியான பதில் சொன்னா ஒரு பாயின்ட் கொடுங்க... தப்பா பதில் சொன்னா அடுத்து சரியா சொல்லணும்னு உற்சாகப்படுத்துற விதமா ரெண்டு பாயின்ட் கொடுங்க. டீல் ஓ.கே?''- சிவகார்த்திகேயன்.

''எனக்கு குழந்தை பிறந்ததுல இருந்து பேப்பர் படிக்கிறதே இல்லை. ஆனாலும், மிஸ் பண்ணாம விகடன் படிச்சிடுவேன். எத்தனை கேள்விக்குப் பதில் சொல்லப்போறேனோ?'' - பாடகி மஹதி.

''குறும்புக் கேள்வியா? பத்து நிமிஷம்... நானே லைன்ல வரேன்!'' - ஜாலி இயக்குநர் ராஜேஷ்.எம்.

எலைட் எருமை டோன்ட் டிஸ்டர்ப்!

எருமைப் பால் லிட்டருக்கு எவ்வளவு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது?

விடை: கொள்முதல் விலை

எலைட் எருமை டோன்ட் டிஸ்டர்ப்!

26-ல் இருந்து

எலைட் எருமை டோன்ட் டிஸ்டர்ப்!

28 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது!

பாக்யராஜ் : ''பால் வேணும்னு குழந்தைகள் அழும். ஆனா, இனி அழுதாலும் கிடைக்காதுங்கிறதால அழுது எதுக்கு எனர்ஜியை வேஸ்ட் பண்ணணும்னு குழந்தைகளே நினைக்கிற அளவுக்கு ஏத்தி இருக்காங்க!''

ஹன்சிகா மோத்வானி: ''மில்க் ரேட் எனக்குத் தெரியாது. ஆனா, ஐ லைக் மில்க்!''

ஞானதேசிகன்: ''நான் எருமைப் பால்லாம் குடிக்கிறதில்லைங்க!''

சிவகார்த்திகேயன்: ''பால் விலை அநியாயத் துக்கு ஏறிடுச்சாமே? நிறைய ஏறிடுச்சாங்க?''

மஹதி: ''அஞ்சு ரூபா ஏத்தி இருக்காங்கன்னு நினைக்கிறேன். பால் விலையைக் கேட்டாலே, பயமா இருக்குங்க!''

ராஜேஷ்: ''ஒரு குவார்ட்டர் ரேட் என்னன்னு கேட்டா, கரெக்டா சொல்வேன். பால் விலையைப் பத்தி கேக்கிறீங்களே பாஸ்!''

வானவில்லில் இருக்கும் நிறங்கள் என்னென்ன?

விடை: ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு.      

பாக்யராஜ்: ''தமிழ்நாட்டுக் கட்சிக் கொடிகளின் நிறங்களைவிட குறைவாதான் இருக்கும்!''

ஹன்சிகா மோத்வானி: ''செவன் கலர்ஸ்.. வயலெட், எல்லோ, க்ரீன், இண்டிகோ, புளூ, ரெட், ஆரஞ்ச்!''

ஞானதேசிகன்: ''ஏழு கலரு.. நீலம், சிவப்பு அப்புறம்.. ரெண்டுதான் தெரியுது. பக்கத்துல இருக்கிற நம்ம ஆளுங்ககிட்ட கேட்டுச் சொல்லலாமா?''

சிவகார்த்திகேயன்: ''ரெட், ஆரஞ்ச், வயலெட், எல்லோ, க்ரீன், இண்டிகோ, புளூ... கரெக்ட். நாங்கள்லாம் சயின்ஸ்ல சூரப்புலி!''

மஹதி: ''ரெட், ஆரஞ்ச், வயலெட், க்ரீன், இண்டிகோ, யெல்லோ, ப்ளூ.. சரியா? ஸ்கூல்ல மனப்பாடம் செஞ்சது!''

ராஜேஷ்: ''நான் ஸ்கூல்ல படிச்சப்போ சிலபஸ்ல ஏழு கலர் இருந்துச்சி. இப்போ மாத்திட்டாங்களான்னு தெரியலை!''

எலைட் எருமை டோன்ட் டிஸ்டர்ப்!

செல்போனுக்கு வரும் விளம்பர அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்-களுக்குத் தடை போட எந்த எண்ணுக்கு 'START DND’ என்று மெசேஜ் அனுப்ப வேண்டும்?

விடை:  1909

பாக்யராஜ்: ''உங்க கையை நீங்களே கிள்ளிப் பாருங்க. அப்போதான் மத்தவங்களுக்கு எப்படி வலிக்கும்னு புரியும். இதெல்லாம் தெரிஞ்சா, யாரும் அப்படி மெசேஜ் அனுப்ப மாட்டாங்க!''

ஹன்சிகா மோத்வானி: ''மம்மிக்குத்தான் தெரியும். அவங்ககிட்ட கேட்டுச் சொல்லவா?''

ஞானதேசிகன்: ''நான்லாம் எஸ்.எம்.எஸ். பார்க்கிறதும் இல்ல. அனுப்புறதும் இல்ல. அப்புறம் எதுக்கு நான் அதைப் பத்தி  கவலைப்படணும்!''

சிவகார்த்திகேயன்: ''அந்த நம்பரைத்தான் பாஸ் நானும் தேடிட்டு இருக்கேன். கொஞ்சம் சொல்லுங்களேன்... உங்களுக்குப் புண்ணியமாப்போகும்!''

மஹதி: ''நான் பயன்படுத்துற நெட்வொர்க்ல 'டோன்ட் டிஸ்டர்ப்’னு ஒரு ஆப்ஷன் இருக்கு. அதை ஆக்டிவேட் பண்ணிட்டாலே போதும்!''

ராஜேஷ்: ''என்னமோ சொல்லுவாங்களே.. என்னங்க அது?''

உயர் ரக மதுபானங்களை விற்க தமிழக அரசு விரைவில் திறக்கவிருக்கும் கடைகளுக்கு என்ன பெயர் சூட்டியிருக்கிறார்கள்?

விடை: எலைட்

பாக்யராஜ் : ''லாஸ்ட் ஸ்மைல் அல்லது கேட் வே ஆஃப் ஹெல்னு வைக்கலாம். அதான் பொருத்தமா இருக்கும்!''

ஹன்சிகா மோத்வானி: ''டமில் நாட்டுலயா? ஹைகிளாஸ் ஒயின்ஷாப்?''

ஞானதேசிகன்: என்னாங்க பேரு..? உயர் குடிமகன் கடை... சரியா?''

சிவகார்த்திகேயன்: ''நான் ஒரு நல்ல குடிமகன். குடிக்கிற மகன் கிடையாது!''

மஹதி: ''என்னங்க இது என்கிட்ட இப்படிலாம் கேட்கலாமா?''

ராஜேஷ்: ''ஆங்... இப்படித்தான் கேள்வி கேட்கணும். இது நம்ம ஏரியா. எலைட்... சொல்லும்போதே எவ்வளவு கிக்கா இருக்கு பாருங்க!''

சமீபத்தில் நில மோசடி செய்ததாகக் கைது செய்யப்பட்ட தி.மு.க-வைச் சேர்ந்த நடிகர் யார்?

விடை: ஜே.கே.ரித்தீஷ்

பாக்யராஜ் : ''நாயகன்-2''

ஹன்சிகா மோத்வானி: ''ஆக்டரை அரெஸ்ட் பண்ணிட்டாங்களா? வாட் பிராப்ளம்?''

ஞானதேசிகன் : ''நம்ம ராமநாதபுரத்துக்கார தம்பி ரித்திஷ்!''

சிவகார்த்திகேயன்: ''எம்.பி. ரித்தீஷ் அவர்களே...!''

மஹதி: ''ம்ம்... ரித்தீஷ்.. யார்கிட்டயோ பேசிட்டு இருந்தப்போ சொன்னாங்க!''

ராஜேஷ் : ''ஜே.கே.ரித்தீஷ்.. எப்படி சார் அவரை மறக்க முடியும்?''

முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் ஆங்கிலப் படம் எது?

விடை: 'டேம் 999’

பாக்யராஜ் : ''டேம் 999. ஆனா, படத்துக்கு  ட்ரபுள் 999னு பேர் வெச்சிருந்தா சரியா இருக்கும்!''

ஹன்சிகா மோத்வானி: ''நான் ஆக்ட் பண்ண வேலாயுதம் பார்த்தீங்களா? அதைப் பத்தி லாம் கேள்வி கேட்க மாட்டீங்களா?''

ஞானதேசிகன்: ''காலையிலதான் பேப்பர்ல படிச்சேன். டேம் 999...''

சிவகார்த்திகேயன்: ''டேம் 999...''

மஹதி: ''அப்படி எதாவது படம் வந்து இருக்கா..? தெரியலியே!''

ராஜேஷ்: ''ஆமாங்க.. டேம் 999-ன்னு சொன்னாங்க. நான் இன்னும் படம் பார்க்கலை!''