`பியார் பிரேமா காதல்' படத்தின் ஸ்னீக் பீக் | pyar prema kadhal sneakpeak

வெளியிடப்பட்ட நேரம்: 12:16 (09/08/2018)

கடைசி தொடர்பு:12:16 (09/08/2018)

`பியார் பிரேமா காதல்' படத்தின் ஸ்னீக் பீக்

யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஹரிஷ் கல்யாண், ரைஸா நடிப்பில் 'பியார் பிரேமா காதல்' படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகியுள்ளது.

  காதல்

'பொறியாளன்', 'வில் அம்பு' படங்களில் நடித்த ஹரிஷ் கல்யாண், 'பிக் பாஸ்' முதல் சீஸனில் கலந்துகொண்டு பிரபலமானார். அதே நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புகழ்பெற்றவர் ரைஸா. இருவரும் சேர்ந்து நடித்துள்ள  படம் `பியார் பிரேமா காதல்’. ரைஸா ஏற்கெனவே `வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தாலும், ஹீரோயினாக இதுவே அவருக்கு முதல் படம். புதுமுக இயக்குநர் இளன் இயக்கியுள்ள படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும், இந்தப் படத்தை ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் சார்பில், அவரே தயாரித்தும் இருக்கிறார். 

இதனால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. காமெடி கலந்த காதல் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள்  வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், இன்று வெளியாகவிருந்த இப்படம் தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவையொட்டி நாளை 'விஸ்வரூபம்-2' வுடன் வெளியாகவுள்ளது.