வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (09/08/2018)

கடைசி தொடர்பு:13:20 (09/08/2018)

அரசியல் தலைவர்களில் கடைசி அரசியல் தலைவர் கலைஞர் கருணாநிதி - இளையராஜா புகழஞ்சலி

``அரசியல் தலைவர்களில் கடைசி அரசியல் தலைவர் தி.மு.க தலைவர் கருணாநிதி'' என இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இளையராஜா - கருணாநிதி

 

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். வயது மூப்பின் காரணமாக கடந்த 7-ம் தேதி மாலை 6 மணியளவில் உயிரிழந்தார். பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி மஹாலில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல் ராணுவ மரியாதையுடன் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது.

ஆஸ்திரேலியாவுக்கு இசை நிகழ்ச்சிக்காக சென்றுள்ள இசையமைப்பாளர் இளையராஜா தனது இரங்கலை வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார். அதில், அரசியல் தலைவர்களில் கடைசி அரசியல் தலைவர் கலைஞர், அரசியல், கலை, இலக்கியம் என எல்லாத் துறைகளிலும் தலைசிறந்து விளங்கிய கலைஞரின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு" எனத் தெரிவித்துள்ளார்.

கலைஞர் கைவண்ணத்தில் உருவான 'பாலைவன ரோஜாக்கள்', 'உளியின் ஓசை', 'பாசப் பறவைகள்', 'பொன்னர் சங்கர்' உள்ளிட்ட படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.