வெளியிடப்பட்ட நேரம்: 16:26 (09/08/2018)

கடைசி தொடர்பு:16:26 (09/08/2018)

`உங்களுக்கு வயசே ஆகாதா..?’ மாணவன் கெட்டப்பில் மகேஷ் பாபு; உருகும் ரசிகர்கள்!

தெலுங்கு சினிமாவின்  `ஹேண்ட்சம்’ நடிகர் மகேஷ் பாபுவின் நடிப்பில் வெளிவர உள்ள ‘மகர்ஷி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகியுள்ளது. 

மகேஷ் பாபு
 

இன்று, மகேஷ் பாபுவின் 43-வது பிறந்தநாள். அவரின் ரசிகர்களுக்குப் பிறந்தநாள் ட்ரீட்டாகத் தன் 25-வது திரைப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார் மகேஷ் பாபு. அவர் முதல்வராக நடித்து வெளியான  `பாரத் அனே நேனு’ திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ். அவரின் திரைப்படங்களுக்கு டோலிவுட்டில் தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

தற்போது, `தோழா’ திரைப்படம் புகழ் வம்சி, இயக்கும் புதிய படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படத்துக்கு,  `மகர்ஷி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை வெளியிட்டு, `என் புதிய பயணத்தின் தொடக்கம்’ என்று மகேஷ் பாபு குறிப்பிட்டுள்ளார்.  இப்படத்தில், மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துவருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படத்தின் டீசர், இணையத்தில் வைரல் ஆகிவிட்டது. காரணம், மகேஷ் பாபு இத்திரைப்படத்தில் கல்லூரி மாணவராக நடிப்பது போன்று டீசரில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.  `கையில் லேப் டாப் வைத்துக்கொண்டு கூலாக நடந்துவருகிறார்  ஹேண்ட்சம் ஸ்டார் மகேஷ் பாபு. `உங்களுக்கு வயது ஆகாதா மகேஷ் பாபு’ என்று ரசிகர்கள் ட்விட்டரில் உருகிவருகின்றனர்.  இத்திரைப்படம், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகிறது. 25-வது திரைப்படத்துக்கும் 43-வது பிறந்தநாளுக்கும் வாழ்த்துகள் மாகேஷ் பாபு! 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க