முழங்காலிட்டு, கைகூப்பி கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய நடிகை த்ரிஷா! 

தி.மு.க தலைவர் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள மெரினாவுக்கு நேரில் சென்று நடிகை த்ரிஷா அஞ்சலி செலுத்தினார். 

த்ரிஷா

தி.மு.க தலைவர் கருணாநிதி வயது முதிர்வின் காரணமாக ஏற்பட்ட நோய் தொற்றால் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு தி.மு.க தொண்டர்கள் மற்றும் தலைவர்களுக்குப் பேரிழப்பாக அமைந்துள்ளது. இதையடுத்து, கருணாநிதியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்குப் பிரதமர், ஆளுநர், பல்வேறு மாநில அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தினர். இதன்பின் அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே புதைக்கப்பட்டது. 

இந்தநிலையில் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள மெரினாவுக்கு இன்று நேரில் வந்த நடிகை த்ரிஷா, சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் அவரின் தாயாரும் உடனிருந்தார். அப்போது சோக மிகுதியில் முழங்காலிட்டு, கைகூப்பி கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினார் த்ரிஷா. இதற்கிடையே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து மெரினாவில் அடக்கம் செய்த பிறகு, அடுத்த நாள் அவரது சமாதிக்கு நேரில் சென்று த்ரிஷா மரியாதை செலுத்தினார். இப்போது கருணாநிதிக்கும் அதேபோல் நினைவிடத்தில் சென்று மரியாதை செலுத்தியுள்ள புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!