வெளியிடப்பட்ட நேரம்: 17:19 (09/08/2018)

கடைசி தொடர்பு:17:19 (09/08/2018)

கணவருக்காகப் பாடகியான நஸ்ரியா - யூ டியூபை கலக்கும் `புதியொரு பாதையில்' பாடல்! 

தன் கணவரின் படத்துக்காக நடிகை நஸ்ரியா நஸீம் பாடிய பாடல் ஒன்று, செம வைரலாகிவருகிறது. 

நஸ்ரியா நஸீம்

தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள நடிகை நஸ்ரியாவுக்கு, தொடக்கமே சிறப்பாக அமைந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அவர் நடிப்பில் வெளியான `கூடே' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இப்படத்தில் பிரித்வி ராஜ், பார்வதி உள்ளிட்டோர் நடித்திருந்தாலும், நஸ்ரியா ரீ-என்ட்ரிக்காகவே சிலர் படத்தைப் பார்த்துவருகின்றனர். மேலும் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றிலும் அவரைக் கொண்டாடிவருகின்றனர். இதற்கிடையே, தனது ரீ- என்ட்ரியில் புதிய அவதாரம் ஒன்றையும் நஸ்ரியா எடுத்துள்ளார். ஆம், தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார் நஸ்ரியா. 

மலையாள சினிமாவின் பிரபல இயக்குநர் அமல் நீரத்துடன் மூன்றாவது முறையாக நஸ்ரியாவின் கணவர் ஃபஹத் பாசில் இணைகிறார். இப்படத்துக்கு, `வரதன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில்தான், நஸ்ரியா தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். தயாரிப்பாளர் அவதாரத்துடன், தன் கணவருக்காக பாடகியாகவும் மாறியுள்ளார். படத்துக்கான பணிகள் நடந்துவரும் வேளையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள `புதியொரு பாதையில்' எனத் தொடங்கும் பாடலை நஸ்ரியா பாடியுள்ளார். சுசின் ஷியாம் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாட்டின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ள நிலையில், யூ டியூபில் ஹிட்டடித்துவருகிறது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க