Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்

• இந்தியாவின் 'டாப் மோஸ்ட் டேஞ்சரஸ் நடிகை’... கேத்ரீனா கைஃப்! ஏன்? கூகுள் தேடலில் இந்திய இளைஞர்கள் பெரும்பாலும் தேடுவது கேத்ரீனாவைத்தான். அதனால், இவருடைய படங்களோடு இலவச இணைப்பாக வைரஸ்களை இணைத்து அனுப்புகிறார்கள் ஹேக்கர்கள். இதனாலேயே கேத்ரீனாவுக்கு இந்தப் பட்டம். அழகுன்னாலே ஆபத்துதானோ?!

இன்பாக்ஸ்

•  ட்விட்டர் மூலம் சண்டையிட்டுக்கொள்வதுதான் இப்போது டோலிவுட் டிரெண்ட். ' 'டொக்குடு’தான் இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் படம்!’ என மகேஷ் பாபு ட்விட் செய்ய, 'உண்மையில் ஜெயித்தவர்களை மக்களே கொண்டாடுவார்கள். தங்கள் வாயாலேயே சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது!’ என்று பதிலுக்கு ராம்சரண் தேஜா ட்விட்டி இருக்கிறார். 'சுற்றி உள்ளவர்கள் பொறாமை பிடித்தவர்களாக இருந்தால், எந்த அங்கீகாரமும் கிடைக்காது. அதற்குத்தான் இந்த சுய விளம்பரம்!’ என்று பதிலுக்குப் போட்டுத் தாக்கியிருக்கிறார் மகேஷ். ட்விட்டுங்க ட்விட்டுங்க!

இன்பாக்ஸ்

•  மேற்கு வங்கத்தில் கோலோச்சிக்கொண்டு இருந்த மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜியை வேட்டையாடி இருப்பவர் 'வீரப்பன் வின்னர்’ விஜயகுமார் ஜ.பி.எஸ். இவரை மீண்டும் தமிழ்நாட்டுக்கு அழைத்துவருவது முதல்வர் ஜெயலலிதாவின் திட்டம். ச்ச்சுசுட்ட்டே புடுவேன்!

•  'அடுத்த ஆண்டு ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார்’ என எதிர்பார்க்கப்பட்ட சாய்னா நெஹ்வால், சமீபமாகத் தொடர்ந்து போட்டிகளில் தோல்விகளையே சந்திப்பதில் ரொம்பவே அப்செட். சீன ஓப்பன் பேட்மிட்டன் பந்த யத்தில் முதல் சுற்றிலேயே சாய்னா வெளியேறியது அதிர்ச்சி. வா வா சாய்னா!

இன்பாக்ஸ்

•  'தி டர்ட்டி பிக்சர்’ படத்தோடு நடிப்புக்கு முழுக்குப் போட இருக்கிறார் 33 வயது வித்யா பாலன். அடுத்த ஆண்டு யு டி.வி. நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சித்தார்த் ராய் கபூரைத் திருமணம் செய்ய இருக்கும் வித்யா பாலன், மும்பை கடற்கரை அருகே புது ஃப்ளாட் வாங்கியிருக்கிறார். நினைவெல்லாம் வித்யா!

இன்பாக்ஸ்

• 'இனி காக்கிச் சட்டை வேடங்களில் நடிக்க மாட்டேன்’ என அறிவித்து இருக்கிறார் சல்மான். அவர் போலீஸாக நடித்த படங்கள் அதிரிபுதிரி ஹிட் அடிக்க, தொடர்ந்து காக்கிக் கதைகளே தேடி வரத் தொடங்கிவிட்டன. 'நானும் எவ்வளவு நாள்தான் நல்லவனாவே நடிக்கிறது?’ என்று அதிரடியாக இந்த முடிவு. நீங்க கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன் பாய்!

இன்பாக்ஸ்

•  ஹிலாரி கிளின்டன் கொடுத்த அழுத்தம் காரணமாக மியான்மர் தேச தேர்தல் விதிமுறைக் கெடுபிடிகள் தளர்த்தப்பட்டன. இதனால், இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருக்கிறார்  ஆங் சான் சூ கி. 'கட்சியின் தலைவர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா?’ என சொந்தக் கட்சிக்குள்ளேயே எழும் எதிர்ப்புகளைப் புறந்தள்ளிவிட்டு இடைத்தேர்தலுக்கு ஆயத்தமாகிறார் சூ கி. வெற்றி நிச்சயம்!

இன்பாக்ஸ்

•  நடிகர் ஜான் ஆபிரஹாமுடன் இணைந்து கால்பந்து அகாடமி ஒன்றைத் தொடங்கவிருக்கிறார் இந்தியக் கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பாய்ச்சுங் பூட்டியா. ''வருடத்துக்கு 40 சிறுவர்கள் இங்கு இலவசப் பயிற்சி பெறுவார்கள்'' என்கிறார் இவர். நம்பிக்கை ரத்தம் பாய்ச்சுங்க பாய்ச்சுங்!