வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (13/08/2018)

கடைசி தொடர்பு:03:00 (13/08/2018)

ஹன்சிகாவின் 50வது படத்தின் பெயர் அறிவிப்பு !

பிரபுதேவாவுடன் 'குலேபகாவலி' படத்திற்கு பிறகு, விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக 'துப்பாக்கி முனை', அதர்வாவுக்கு ஜோடியாக '100' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நடிகை ஹன்சிகா. ஹீரோயினை மையப்படுத்தின க்ரைம் த்ரில்லர் கதை ஒன்றில் அவர் நடிப்பதாகவும் அதனை 'ரோமியோ ஜூலியட்', 'போகன்' ஆகிய படங்களில் இணை இயக்குநராக இருந்த ஜமீல் இயக்கவிருக்கிறார் என்றும் அறிவிப்பு வெளியானது. 

ஹன்சிகா

இப்படத்தின் அறிவிப்பை ஹன்சிகாவின் பிறந்தநாளான ஆகஸ்ட் 9ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவு காரணமாக அதனை தள்ளி வைத்திருந்து தற்போது வெளியிட்டிருக்கின்றனர். ஹீரோயின் சென்ட்ரிக் படமான இப்படத்திற்கு 'மஹா' என பெயரிட்டுள்ளனர். மேலும்,  இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க மதியழகன் தயாரிக்கிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பை செப்டம்பர் மாதத்திலிருந்து துவங்க இருகிறார்கள். ஹன்சிகாவின் ஐம்பதாவது படமான இதன் பெயரை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஹன்சிகா தன் முதல் தமிழ் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க