"கேரளாவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம்" - விஜய் தேவரக்கொண்டா 

கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டு இடுக்கி, எர்ணாகுளம், ஆலப்புழா ஆகிய இடங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. ராணுவம், பேரிடர் மேலாண்மை ஆகியோர் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.  பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவால், பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சேதத்தை சரிசெய்ய நடிகர்கள் பலரும் நிவாரண நிதி அளித்துவருகின்றனர். குறிப்பாக, 'அர்ஜுன் ரெட்டி' புகழ் நடிகர் விஜய் தேவரக்கொண்டா, கேரள முதல்வர் நிவாரண நிதிகாக ரூபாய் ஐந்து லட்சத்தை நிதியுதவியாக வழங்கியுள்ளார்.

விஜய் தேவரக்கொண்டா

அதற்கான பணப் பரிவர்த்தனையை போட்டோ எடுத்து, அதைத் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில், "வெள்ளம் காரணமாக கேரளா மிகவும் சேதமடைந்திருப்பதை நான் அறிகிறேன். என்னுடைய ஒவ்வொரு விடுமுறையையும் நான் கேரளாவில்தான் கழித்திருக்கிறேன். பல இனிமையான நபர்களை நான் கேரளாவில் சந்தித்திருக்கிறேன். அவர்களை இதிலிருந்து எப்படி வெளியே கொண்டுவருவது எனத் தெரியவில்லை. நாம் அனைவரும் சிறிய அளவில் உதவிசெய்து பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவோம். நான் இந்த ஐந்து லட்சத்துடன் ஆரம்பிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!