கேரளா வெள்ளம் - நடிகர் அல்லு அர்ஜுன் 25 லட்சம் நிதியுதவி !

பருவமழை காரணமாக கேரளாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இடுக்கி, எர்ணாகுளம், ஆலப்புழா உள்ளிட்ட பல மாவட்டங்கள் மிகுந்த சேதமடைந்துள்ளன. இந்தச் சேதத்தை சரிசெய்து இயல்பு நிலைக்குக் கொண்டுவர அரசியல் கட்சிகள், திரைப் பிரபலங்கள், தங்களால் முடிந்த வரை நிதியுதவி செய்துவருகின்றனர். நாசர் தலைமையிலான தென்னிந்திய நடிகர் சங்கம் 5 லட்ச ரூபாய் கமல்ஹாசன், சூர்யா - கார்த்தி ஆகியோர் தலா 25 லட்ச ரூபாய் வழங்கியுள்ளனர்.

அல்லு அர்ஜுன் - கேரளா வெள்ளம்

இதைத் தொடர்ந்து, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனும் கேரளா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூபாய் 25 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார். மேலும்,"என்றும் கேரளா மக்களுக்கு என் மனதில் தனி இடம் உண்டு. அவர்களின் அன்பும், அவர்களுக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் இழப்பும் ஈடுசெய்ய முடியாதவை. இருந்தும், என்னால் முடிந்தவற்றைச் செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்" என்று தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!