வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (14/08/2018)

கடைசி தொடர்பு:06:30 (14/08/2018)

ஸ்ரீதேவியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது - போனி கபூர் உருக்கம்

ந்தியத் திரையுலகை தனது தனித்துவமான நடிப்பால் கட்டிப்போட்டவர் மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி. அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என அவரது கணவரும் இயக்குநருமான போனி கபூர் தெரிவித்துள்ளார். 

ஸ்ரீதேவி

 புதுடெல்லியில், ஸ்ரீதேவியின் 55-வது பிறந்தநாளையொட்டி நேற்று அவருக்குப் புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது. மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் சார்பில் ஃபிலிம் டிவிஷன் ஏற்பாடுசெய்திருந்த விழாவில், போனி கபூர் தனது இரு மகள்களுடன் கலந்துகொண்டு பேசினார். ``ஸ்ரீதேவி தனித்துவமானவர். அவர், பள்ளிப்படிப்பைக் கூட தாண்டவில்லை. ஆனால், பலகோடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். அவரது இடத்தை நிரப்ப எந்தவொரு நடிகையாலும் இனி முடியாது. 

திரைப்படங்களில் நடிக்கும்போது, தன்னுடைய பாத்திரத்துக்கு அவர் மிகவும் நெருக்கமானவராக இருப்பார். சினிமாவின்மீது அளப்பரிய நேசம் வைத்திருந்தார். கடைசி மூச்சு வரை அவர் சினிமாவுக்காகவே வாழ்ந்தார். முதன்முதலில் அவரைப் பார்த்தபோதே, காதலில் விழுந்துவிட்டேன். அவரது இழப்பை ஈடுசெய்ய முடியாது. நானும் எனது இரு மகள்களும் அதை இப்போது உணர்கிறோம்” என்று உருக்கமாகப் பேசினார்.