படப்பிடிப்பில் அமலா பால் காயம் !

அறிமுக இயக்குநர் வினோத் இயக்கத்தில், 'அதோ அந்த பறவை போல' என்னும் படத்தில் அமலா பால் நடித்துவருகிறார். ஹீரோயினை மையப்படுத்திய இப்படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் நிறையவே உள்ளன. அவ்வாறு ஸ்டன்ட் காட்சியில் அவர் கையை வேகமாகச் சுழற்றிய போது, தசைநார்களில் காயம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் அதை சுளுக்கு என நினைத்த படக்குழு, அவருக்கு ஐஸ் ஒத்தடம்கொடுத்து படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்தியிருக்கிறது.

அமலா பால்

ஆனால் வலி அதிகமானவுடனே, அந்தக் காட்சியை மட்டும் பிறகு எடுத்துக்கொள்ளலாம் எனத் தள்ளிவைத்துவிட்டு, அவர் கையை அதிகம் பயன்படுத்தாமல் இருக்கும் மற்ற காட்சிகளை எடுத்தனர். பிறகு, சிகிச்சைக்காக கொச்சி சென்றுள்ள அவர், விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்வார். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு 90 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டது. அமலா பால் இயல்பு நிலைக்கு வந்தவுடன் மீதமுள்ள காட்சிகளை எடுக்க  திட்டமிட்டிருக்கிறார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!