வெளியிடப்பட்ட நேரம்: 19:28 (14/08/2018)

கடைசி தொடர்பு:19:28 (14/08/2018)

`நம்ம ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு வெள்ள நாய், கறுப்பு நாய் இருக்கும்!’ - `60 வயது மாநிறம்’ படத்தின் ட்ரெய்லர்

இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில், விக்ரம் பிரபு நடிக்கும் `60 வயது மாநிறம்’ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

விக்ரம் பிரபு


கலைப்புலி தாணு தயாரிப்பில், இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் படம் `60 வயது மாநிறம்’. இசைஞானி இளையராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி, இந்துஜா, மோகன் வி ராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராதாமோகன், இளையராஜா, விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ் என வித்தியாசமான காம்போவில் உருவாகும் படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்தப் படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தந்தையைத் தேடி அலையும் மகன் என்ற கதையம்சத்துடன் படம் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் படம் திரைக்கு வர உள்ளது. 'பக்கா' படத்துக்குப் பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.